Thursday, October 09, 2008

முதலாளியால் வெறுக்கப்பட 10 காரணங்கள்




கிசுகிசுவிற்கு தடா!!!

ஒரு நிறுவனத்தை உதறி விட்டு வெளியே வரும் அநேகமானவர்கள்,வேலையை விட்டதற்கு கூறும்
காரணங்களில் முதன்மையானது, சீர்கெட்ட நிர்வாகம்

என்பதுதான். நம் நிறுவனத்தை நாம் வெறுப்பதில்
இருக்கும் நியாயத்தைப் போல நம்மை நம் முதலாளிகள்
வெறுப்பதிலும் நியாயம் இருக்கதானே செய்யும்.
பணியாளர்களின் மனநிலையைப் பற்றி ஆராய்ந்து வரும்
உளவியலாளர் சூசன் நிக்கல்சன், நம்மை, நம்
முதலாளிகள் வெறுக்க 10 நியாயமானக் காரணங்களைப்
பட்டியலிடுகிறார்...

### நம்பகத்தன்மை இல்லாதது:
ஒரு பணியை ஒருவரிடம் ஒப்படைத்தால், குறிப்பிட்டக் கால அளவுக்குள் அந்தப் பணியை முடிப்பது அவசியம். ஏதாவது சாக்குபோக்கு
சொல்லி பணியை முடிக்காமல் இருப்பது பாஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்துமாம்.

### தவறுகளை திருத்திக்கொள்ளாமல் இருப்பது:
பணியில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனைக் கெளரவமாக ஒப்புக்
கொள்வது உத்தமம். கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைனு சமாளிக்க
நினைத்தால் பாஸின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமாம்.

### கிசுசிசு பேசுவது:
கிசுகிசு பேசுவது பாஸுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும் என்பதில்
ஐயமில்லை. கிசுகிசுக்களில் பாஸின் தலையே உருள வாய்ப்புண்டு என்பது ஓர் காரணம். சக ஊழியர்கள் மேலிருக்கும் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்ற அபிப்ராயமும் பாஸுக்கு வந்து விட வாய்ப்புண்டாம்.

### எதிர்மறையாக பேசுவது:
ஆபிஸ் மீட்டிங்குகளில், யார் எதை சொன்னாலும், இது முடியாது,
அது முடியாது என எதிர்மறையாக பேசுபவர்களை முதலாளிகள்
விரும்புவதில்லையாம்.

### மாற்றங்களை விரும்பாதது:
ஆபிசில் புதிதாக நடைமுறைக்கு வரும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது பாஸுக்கு பிடிக்காதாம். பல நேரங்களில் முதலாளியாலே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கூட அந்த புது விஷயம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம்!

### நாற்றம் அடிப்பது (ஹி.ஹி..)
வியர்வை நாற்றம், சாக்ஸ் நாற்றம், பூண்டு சாப்பிட்டு விட்டு செல்வது போன்ற கப்பு விஷயங்கள் பாஸ்களுக்கு பிடிப்பதில்லை! (யாருக்கும் பிடிக்காது...)

### மிஸ்டர் லேட்டாக இருப்பது:
ஆபிசுக்கு லேட்டாக வந்து, டயர் பஞ்சர் என ஆதி காலத்து சாக்கை சொல்வது, அடிக்கடி லீவ் போடுவது போன்ற சமாச்சாரங்கள் பாஸ்களுக்கு கோபத்தை ஏற்படுத்துமாம்.

### அதிகப்பிரசங்கி தனம்:
பாஸ் கூறும் வேலையை செய்தால் போதும். முந்திரிக்கொட்டை மாதிரி, பாஸ் சொல்லாத எதையாவது செய்து தொலைத்தால், கதை கந்தல்! எள்ளுனு சொன்னா எண்ணையா இருப்பதை அனைவரும் விரும்புவதில்லை.

### ஆபிசிலிருந்து சொந்த விஷயங்களை செய்வது:
ஆபிஸ் கம்ப்யூட்டரில் ஆர்க்குட்டை நோண்டுவது, ஆபிஸ் போனில் சொந்த விஷயங்களை மணிக்கணக்காகப் பேசுவது போன்றவைகள் பாஸ்களுக்கு ஆகாதாம்.

### கத்துவது, சண்டை போடுவது:
அமைதியான டீமைதான் (Team) எந்த பாஸும் விரும்புவார். அடிக்கடி யாரையாவது வம்பு செய்து கூச்சல் போடுவது, ஒட்டு மொத்த குழுவின் வேலையையும் கெடுக்கும்.

ஆங்கில கட்டுரை உபயம்:
news.com.au இணையதளம்

No comments: